லஞ்சம் குறித்த வழக்கொன்றில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைப் பச்சை அரிசியை விற்பனை செய்த போது, விலை சுட்டெண்னுக்கு முரணாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை விற்பனை செய்ய உத்தரவிட்டதன் மூலம் அரசுக்கு 4 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சதோச நிறுவனத்தின் முன்னாள் பதில் முகாமையாளருக்கு எதிராக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற கூட்டம் காரணமாக அவர், இன்று ஆஜராக முடியவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்தே ஏப்ரல் 23 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.