சகல பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு அனைத்து ஊடகங்களும் தேசிய ஐக்கியத்திற்காக பொறுப்புடன் செயற்பட்டதாக இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொறுப்புடன் ஊடகத்தை பயன்படுத்தியமை சம்பந்தமான அனைத்து ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரம், சமூக பொறுப்புக்காக செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
30 வருடங்கள் போரில் இன்னல்களை அனுபவித்த நாடு மீண்டும் அந்த நிலைமையை நோக்கி செல்வதை தடுக்க அனைவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. இதனால், இலங்கை பின்நோக்கி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவி ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.