மறைந்த நடிகை ஸ்ரீதேவி அஸ்தியின் ஒரு பகுதி ஹரித்துவாரில் கரைக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள நடிகர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
அதன்பின் ஸ்ரீதேவி அஸ்தியின் ஒரு பகுதி தமிழகத்தின் ராமேஷ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் அவரது கணவர் போனி கபூரால் கரைக்கப்பட்டது.
இந்நிலையில், அஸ்தியின் மற்றொரு பகுதி ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் கரைக்கப்பட்டது.
அப்போது போனியின் சகோதரர் அனில் கபூர், அமர் சிங் எம்.பி, ஸ்ரீதேவி மகள்கள், மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா உள்ளிட்டோர் உடனிருந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருக்கமான சிலர், 1993-ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஹரித்துவார் சென்றிருந்த ஸ்ரீதேவி, மீண்டும் ஒரு நாள் நான் இங்கு வருவது சத்தியம் என கூறியுள்ளார்.
இந்த சத்தியத்தை நிறைவேற்றவே ஹரித்துவாரில் ஸ்ரீதேவியின் அஸ்தியை அவரது கணவர் போனி கபூர் கரைத்துள்ளதாக கூறுகின்றனர்.