பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்கள் காலவரையின்றி தொடர்ந்து முடக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற்கொண்டு தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வேறு முறைகளை பயன்படுத்தி பேஸ்புக் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வேறு முறைகளின் ஊடாக சமூக வலைத்தளங்களுக்கு சென்று பல்வேறு போலி கட்டுக்கதைகள், போலி தகவல்கள் மற்றும் இனவாதத்தை பரப்பும் கருத்துக்களை வெளியிட்டவர்களை கைது செய்வதற்காக விரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.