முக்கியமான டிப்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!

அழகு குறைபாடு முதல் உடல்நலக் குறைபாடு வரையிலான சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இயற்கை வழியில் உள்ள அற்புதமான பயனுள்ள டிப்ஸ்கள் இதோ,

  • இரவில் படுத்தவுடன் உறக்கம் வருவதற்கு, கசகசாவுடன் பாதாம் பருப்பை சேர்த்து நன்கு அரைத்து அதை பாலில் போட்டு காய்ச்சி கற்கண்டு கலந்து குடிக்க வேண்டும்.
  • நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களை போக்க துலசி இலையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து அதை நெற்றியில் வாரம் ஒருமுறை தடவி வர வேண்டும்.
  • வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வயிற்று உப்பிசம் ஏற்பட்டு சிரமப்படும் போது வெந்நீரில் சிறிதளவு ஓமம், சீரகம் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும்.
  • கடுமையான இருமல் இருக்கும் போது 3 டம்ளர் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
  • முகப்பரு அதிகமாக இருப்பவர்கள், சந்தனம் மற்றும் மஞ்சளை நன்கு அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
  • கஸ்தூரி மஞ்சளை ரோஜா பூ சேர்த்து அரைத்து வெயிலில் வைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
  • முடி கொட்டுவதை தடுக்க கேஸ்டிராயிலை சூடுபடுத்தி வதுவதுப்பான சூட்டில் முடியின் வேர்களில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
  • நம் உடலில் நீர்ச்சத்து குறைந்தால், திடீரென தலைவலி ஏற்படும். அதனை போக்க இளநீர் குடித்தாலே போதும். நல்ல தீர்வு கிடைத்துவிடும்.
  • முட்டி இணைப்புகளில் அவ்வப்போது வலி தோன்றினால், அதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குடிக்க வேண்டும்.
  • தினமும் குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய்யை லேசாக தடவி கொண்டு குளித்தால் தோலில் வறட்சி ஏற்படாது.