இணையப் பயன்பாட்டில் ஜப்பான், சீன மொழிகளைப் புறம்தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்த தமிழ் மொழி!!

உலக அளவில் மொழிகளில் இணையத்தளங்கள் கொண்ட பட்டியலை சர்வதேச தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது.

நவீன உலகில் பல விதமாக தொடர்பாடல் வளர்ந்து வருகின்றது. இதில் இணையத்தளம் முக்கிய பங்கு கொண்டதாக காணப்படுகிறது. மேலும் உலக ரீதியில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் அறிய உதவுவதாகவும் இணையத்தளங்கள் காணப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் சமீபத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மன்றம், உலக அளவில் இணையத்தளத்தை பயன்படுத்தும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது இடத்தில் அதிக இணையத்தளங்கள் பயன்படுத்தும் பட்டியலில் ஆங்கில மொழி காணப்படுகின்றது.

அதனை, தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீன மொழிகளை பின்தள்ளிஇ அதிக இணையத்தளங்கள் பயன்படுத்தும் மொழியாக தமிழ் மொழி 2 ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.