யாழ்.நகரில் சுகதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த 8 உணவகங்கள் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. சுகாதார சீர்கேட்டுடன் தொடர்ச்சியாக இயங்கிவந்த மேற்படி உ ணவகங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்ப டையில் பாவனையாளர் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அலுவ லகம் மேற்படி உணவகங்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன் றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே மேற்ப டி உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மேற்படி உணவகங்களுக்கு பாவனையாளர் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்தவாரம் அவதானித்திருந்தார்கள். குறித்த கடைகளில் சுகாதாரம் பேணப்படாமை, மற்றும் காலாவ தியான பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குறைகள் அவதானிக்கப்பட்டது. இவ்வாறு யாழ்.நகரில் 18 கடைகள் இனங்காணப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இதில் 8 கடைகளை சீல் வைத்து மூட உத்தரவிட்ட நீதிவான், 3 வர்த்தக நிலைய உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பியது டன், மேலும் 7 வர்த்தகர்களுக்கு தவணை கொடுத்துள்ளார்.