தற்கொலை செய்து கொண்ட மாணவரின் கடிதம்!

இந்தியாவில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பொதுத்தேர்வில் மூன்று கேள்விக்கு விடையளிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியை சேர்ந்த கரண்வீர் சிங், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவரால் சமீபத்திய பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் கேள்வி மூன்றிற்கு விடையளிக்க முடியவில்லை.

அதனால் விரக்தியில் இருந்த கரண்வீர், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அந்த கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள். உங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப என்னால் வாழ முடியவில்லை. உங்களின் கனவையும் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

நான் தாத்தா, பாட்டியை மிக அதிகமாக நேசிக்கிறேன். அவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.