மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது!!

நெல்­லி­ய­டி­யில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு போதைப் பொருள் விற்­பனை செய்ய முயன்ற குற்­றச்­சாட்­டில் பிறி­தொரு பாட­சா­லை­யின் மாண­வர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்ளதாக பொ­ஸார் தெரி­வித்­துள்ளனர்.கர­வெட்­டிக் கோட்­டத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான விளை­யாட்­டுப்­போட்டி கர­வெட்டி மத்­திய கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு பல பாட­சா­லை­க­ளி­னது மாண­வர்­கள் நேற்­றுச் சென்­றி­ருந்­த­னர்.

சிவில் உடை­யில் முற்­ப­கல் குறித்த பாட­சா­லைக்கு அரு­கில் சென்ற இரண்டு பேர் மாவா போதைப் பொருளை மாண­வர்­க­ளுக்கு விற்க முற்­பட்­டுள்­ள­னர்.அதன்­போது குறித்த இரு­வ­ரை­யும் சிவில் உடை­யில் அங்கு நின்­றி­ருந்த பொலி­ஸார் கைது செய்­த­னர். தவிர போதைப் பொருளை எந்த மாண­வ­னி­டம் விற்­று­விட்டு அல்­லது திணித்­து­விட்­டுச் செல்­ல­வி­ருந்­த­னரோ, அந்த மாண­வன் பொலி­ஸா­ரால் எச்­ச­ரிக்­கப்­பட்­டான் என்று சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­க­ளும் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே அவர்­க­ளும் மாண­வர்­கள் என்­பது தெரி­ய­வந்­தது.அந்த 3 மாண­வர்­க­ளும் நெல்­லி­யடி மகா வித்­தி­யா­ல­யத்­தில் கல்வி கற்­காத ஆனால் கர­வெட்­டிக் கோட்­டத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை மாண­வர்­கள் என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்.