சிறுநீரை அடக்குபவரா?

நம் உடலுறுப்புகளில் முக்கிய உறுப்பான சிறுநீரகங்கள் நம்முடைய அன்றாட சில செயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதோடு பல வருடங்களாக நாம் மேற்கொண்டு வரும் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல்நலத்தை பராமரிக்காமல் இருப்பது போன்றவற்றால் சிறுநீரகங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றது.

மேலும் ஒரு ஆய்வில் மோசமான சில பழக்க வழக்கங்கள், சிறுநீரகங்களை வேகமாக பாதித்து, அழுகி போகச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. அந்த மோசமான கெட்ட பழக்கங்கள் இதோ,

மது மற்றும் புகை

புகை மற்றும் மது பானங்களை அதிகம் குடித்தால், சிறுநீரகங்கள் அதிகப்படியான அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு,சிறுநீரகத்திற்கு செல்லும் சீரான ரத்தோட்டத்தை தடுத்து விடும்.

இதனால் சிறுநீரகங்கள் விரைவில் பழுதடைந்து செயலிழக்க தொடங்கிவிடும்.

போதுமான நீர் அருந்தாமல்

நம் உடலில் சரியான அளவில் நீர்ச்சத்து இருந்தால் தான், சிறுநீரகங்களால் முறையாக டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியும்.

இல்லையெனில், உடல் வறட்சி ஏற்பட்டு சிறுநீரகங்கள் பாதிப்பதோடு, சிறுநீரக கற்களையும் உண்டாக்கும்.

சிறுநீரை அடக்குவது

சிறுநீர்ப்பை நிரம்பி இருக்கும் போது வரும் உணர்வு தான் சிறுநீர் கழிக்க தோன்றும். ஆனால் அப்படி தோன்றும் போது அடிக்கடி சிறுநீரை அடக்கினால், அது சிறுநீரக கற்களை உண்டாக்குவதோடு, சில வகை சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும்.

அதிகளவிலான இனிப்பு உட்கொள்வது

இனிப்புகளை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகளுக்கான அபாயம் அதிகம் இருக்கும்.

அதிகமான புரோட்டீன் எடுப்பது

புரோட்டீன் உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட்டால், அது சிறுநீரக பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே புரோட்டீன் உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்.

உப்பை அதிகம் எடுப்பது

உணவுகளில் அதிகளவிலான உப்பை சேர்த்துக் கொண்டால், அது உயர் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடும்.

எனவே உப்பு நிறைந்த ஸ்நாக்ஸ், ஜங்க் உணவுகள், கேன் உணவுகள், பாக்கெட் உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும்.

அதிகளவு காப்ஃபைன் அருந்துவது

நீண்ட நாட்கள் அதிகளவு காப்ஃபைன் நிறைந்த பானத்தை குடித்து வந்தால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.

தூக்கமின்மை

தினசரி போதிய தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

அதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே தினமும் 7-8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியமாகும்.

குறிப்பு

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டுமெனில், பீட்ரூட் ஜூஸ், கிரான்பெர்ரி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், கேரட் ஜூஸ் மற்றும் இளநீர் ஆகிய இயற்கையான பானங்களை அடிக்கடி குடிக்க வேண்டும்.