கருவளையம் காணாமல் போக!

இன்றைய உலகில் கருவளையம் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படுகின்றது. தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் யோசனை போன்ற காரணங்களாலேயே இது ஏற்படுகின்றது.கருவளையங்கள் இருப்பதால் முகத்தின் பொலிவு நீங்கி, நோய் வாய்ப்பட்டதோற்றம் தோன்றும். இந்த கருவளையத்தை ஐந்தே நாட்களில் இல்லாதொழிக்க முடியும். இது எப்படி எனக் கேட்கின்றீர்களா?

01. இரண்டு துண்டு வெள்ளரிக்காயில் அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பை ஒருமணி நேரம் ஊற வைத்து அரைத்து, அதை தினமும் கண்களைச் சுற்றிப் பூசி 03 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.

02. திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியைப் பயன்படுத்தி கண்களைச் சுற்றி கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

03. சந்தனம் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து, இரவில் உறங்கச் செல்லும் முன் கண்களைச் சுற்றி பூசி வந்தால் கருவளையம் மறையும்.

04. வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் துவாயொன்றை பன்னீரில் நனைத்து அதில் அரைத்தெடுத்த கலவையை தேய்த்து கண்ணின் மீது வைத்து உறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.

05. எலுமிச்சம் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் எனப் பூசி வந்தால் கருவளையங்கள் நீங்கும்.