இப்படி இந்த விரதத்தை கடைப்பிடித்தால் ஏழு தலைமுறையினரையும் முக்தி அடையச் செய்யும்…..!!

மார்கழி மாதம் சுக்லபட்ச அஷ்டமி தினத்தில், எட்டு சித்திகளுக்கும் உறைவிடமான அனகாதேவியுடன் தத்தாத்ரேயரை சேவிப்பவர்களுக்கு, மனம், மொழி, மெய் ஆகியவற்றால் ஏற்படும் பாவங்களை போக்கி, அவர்களை பாவமற்றவர்களாக செய்வார்.இன்றைய தினம் அனகாஷ்டமி என்று அழைக்கப்படும். இதற்காக மேற்கொள்ளப்படும் விரதம் அனகாஷ்டமி விரதம் எனப்படும். எவன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறானோ, அவனுக்கு நானே நேரடியாக அவன் வசமாகி உன்னைப்போல் ஆக்குவேன்’ என்று அருளினார்.

அனகாஷ்டமி தினத்தன்று, விரதமிருந்து அனகாதேவியுடன் கூடிய தத்தாத்ரேயரின் உருவத்தை, தர்ப்பை புல்லில் செய்து வைத்து பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். மேலும் சந்தனம், மலர், நறுமணம் தரும் புகை, தீபம் போன்றவற்றாலும் வழிபாடு நடத்த வேண்டும்.
பலவித வாத்தியங்கள் முழங்க, பாட்டு, பஜனை, நாட்டியத்துடன் தத்தாத்ரேயரை வழிபட்டால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் குறையேதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், அவரது முன் ஏழு தலைமுறையினரையும், பின் ஏழு தலைமுறையினரையும் முக்தி அடையச் செய்யும்.