இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரமித் ரம்புக்வெல விமானத்தில் முறைகேடாக நடந்துகொண்ட விதம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.