பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை மெளமிதா சஹா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் மெளமிதா.

கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மெளமிதா பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக இதை பார்த்து பொலிசாருக்கு தகவல் தந்த நிலையில் பொலிசார் கதவை உடைத்து சடலத்தை மீட்டனர்.

அவர் சடலம் அருகில் இருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

மன அழுத்தத்தால் மெளமிதா பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சமுகவலைதள பக்கம் மூலம் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

அவர் செல்போன் கால்களை வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.