முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமாக செயற்படும் நபர் ஒருவர் தொடர்பில் சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சனிஸ் வாஸ் எனப்படும் நபர் ஒருவர் தொடர்பிலேயே கூட்டு எதிர்க்கட்சிக்குள் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவை சந்திப்பதற்கு வரும் முக்கியமானவர்கள் மற்றும் சாதாரண பொது மக்கள், குறித்த நபரை சுற்றிவளைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை விரும்பாத மஹிந்த பல முறை எச்சரிக்கை விடுத்த போதிலும், சனிஸ் வாஸ் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவின் ஆலோசனைக்கமைய, குறித்த நபர் செயற்படுவதாகவும், தெரியவந்துள்ளது.
24 மணித்தியாலங்களும் மஹிந்தவுடன் சுற்றித் திரியும் இந்த நபருக்கு பாலும் தேனும் வழங்கினால் சோதிடம் கூறப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நபர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியோ அல்லது சாரதியோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.