சென்னை: அஸ்வினியும் நானும் கணவன் -மனைவி போல் வாழ்ந்தோம் என்று கொலையாளி அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை கல்லூரி விட்டு வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதில் நிலைத்தடுமாறிய அஸ்வினி உயிரிழந்தார். அழகேசனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரி அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ரூ. 2 லட்சம் செல்வு
எனது பெற்றோருக்கு தெரியாமல் எனது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி அவருக்காக செலவு செய்துள்ளேன். எங்கள் காதலுக்கு அவரது தாய் சங்கரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் எங்கள் காதல் முறிந்து விடக் கூடாது என்று நினைத்தேன்.
அஸ்வினி எதிர்க்கவில்லை
ஒரு நாள் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு சென்றேன். தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து அவரது கழுத்தில் கட்டினேன். அஸ்வினி வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. இதனால் அஸ்வினி அதிர்ச்சி அடைந்தாலும் எனது செயல்களை எதிர்க்கவில்லை.
முழு காரணம்
தாய்தான் அஸ்வினியும் நானும் கணவன் மனைவி போல் வாழ்ந்தோம். நான் அவரை ராணி போல் வாழ வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் அவரது தாய் என் மீது போலீஸில் புகார் கொடுத்து நான் கட்டிய தாலியையும் கழற்றி எறிந்துவிட்டார்.
மனதை பார்க்கவில்லை
அஸ்வினியன் தாய் எனது அழகை பார்த்தாரே தவிர, எனது நல்ல மனதை பார்க்கவில்லை. அஸ்வினியின் மனதை கெடுத்து என்னுடன் இருந்த தொடர்பை துண்டிக்கவைத்ததே தாய் சங்கரிதான். இதனால் இந்த அசம்பாவித சம்பவங்களுக்கு முழு பொறுப்பு சங்கரிதான் என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.