தொடரும் வன்முறை: புத்தளத்தில் உணவகம் எரிப்பு?

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் உணவகம் ஒன்றுக்கு இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் வர்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்வில்லை என்பதுடன், சேத விபரங்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட செயலா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வாரம் கண்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலரின் கடைகள் எரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்கா நகர் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.