பிரித்தானியாவின் டெல்போர்ட் நகரில் கடந்த 40 ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகள் மற்றும் டீன் ஏஜ் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி பலர் கொலையும் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்த ஆய்வு விசாரணையை சண்டே மிரர் என்ற தனியார் பத்திரிக்கை நடத்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி பாலியல் கும்பல்கள் சிறுமிகளை மயக்கி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பிரித்து அவர்களுக்கு போதை பழக்கத்தை கற்று கொடுக்கிறார்கள்.
பின்னர் சிறுமிகள், டீன் ஏஜ் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதோடு பலர் கொலையும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக நாடளுமன்ற உறுப்பினர் லூசி அலன் கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த 2007-லிருந்து 2009 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 சிறுமிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ரோச்டேல் நகரில் நடக்கும் பாலியல் குற்றங்களை விட இது பெரியது எனவும் சண்டே மிரர் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி மார்டின் ஈவன்ஸ் கூறுகையில், இது போன்ற விடயங்களை சமாளிப்பது தான் எங்களின் முதல் இலக்கு.
அது எந்த காலக்கட்டத்தில் நடந்த குற்றமாக இருந்தாலும் சரி உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.