இந்தியாவில் பெற்ற மகளை கொன்றுவிட்டு பொலிசாரிடம் நாடகமாடிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லியை சேர்ந்தவர் சுதீஷ் குமார். இவரின் 13 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காவல் நிலையத்துக்கு வந்த சுதீஷ் மார்க்கெட்டுக்கு போன தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை பொலிசார் தேட தொடங்கியுள்ளனர். அப்போது சுதீஷும் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகளை தேடியுள்ளார்.
இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் சுதீஷின் மகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு சுதீஷ் தகவல் தந்த நிலையில் சிறுமி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அந்த பகுதி சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது சிறுமி ஹெல்மெட் அணிந்திருந்த ஒரு நபருடன் பைக்கில் சென்றது தெரிந்தது.
அந்த உருவம் கிட்டத்தட்ட சுதீஷ் போலவே இருந்ததால் சந்தேகமடைந்த பொலிசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மகளை தான் கொலை செய்ததை சுதீஷ் ஒப்பு கொண்டார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் ஒரு பையனுடன் சுற்றி வந்ததை சில முறை நேரில் பார்த்து அவரை கண்டித்தேன்.
இந்நிலையில் புதன்கிழமையன்று மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி அவள் வெளியில் சென்றாள்.
அவளை பின் தொடர்ந்து பார்த்த போது அந்த பையனை சந்தித்து பேசிகொண்டிருந்தார்.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் அவளை கடத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து சுதீஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.