நவக்கிரக வழிபாடு, ஒவ்வொருவருக்கும் நல்ல பலன்களை வழங்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலனை வழங்கும் சக்தி உள்ளது.
சூரியனை வழிபட்டால் ஆரோக்கிய நலன் பெறலாம்.
சந்திரனை வழிபட புகழ் வந்து சேரும்.
செவ்வாயை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்
புதனை வழிபட்டால் அறிவு வளர்ச்சியில் சிறந்து விளங்கலாம்.
வியாழ பகவானை வழிபட்டால் கல்வி ஞானம் பெறலாம்.
வெள்ளியை வழிபட்டால் சந்தோஷம் நிலைத்திருக்கும்
சனி பகவானை வழிபடுவதால் ஆயுள் பலம் பெறும்.
ராகு வழிபட்டால் எதிரி பயம் விலகும்
கேதுவை வழிபட்டால் குலம் விருத்தியடையும்.