நமக்கென்று ஒரு சொந்த வீடு இருப்பது எப்போதும் மனநிறைவை அளிக்கும். ஆனால் சிலர் பணவசதி படைத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் அமையாது.
அப்படியே சொந்த இடம் வாங்கினாலும் அதை கட்டி குடிபோகும் பாக்கியம் அனைவருக்குமே கிடைப்பதில்லை. ஏனெனில் சொந்த வீடு கட்ட நினைப்பவரின் ஜாதகத்தில் சொந்த வீடு கட்டும் யோகம் இருக்க வேண்டும்.
அப்படி சொந்த வீடு கட்டி குடி போனாலும் அது நிலைக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.
அதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
பரிகாரங்கள்
- செவ்வாய் கிழமைகளில் சிவப்பு மலர்களால் அங்காரகனைப் பூஜித்து வர வேண்டும். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- சொந்த வீடு கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால், திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்து அங்குள்ள கடல் நீரில் மஞ்சளை கலந்து அதை வீடு கட்ட நினைக்கும் மனையில் தெளிக்க வேண்டும்.
- சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை ஒன்பது செவ்வாய் அன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
- சொந்த வீடு கட்டும் யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வர வேண்டும்.
- செம்பு பாத்திரங்களை தானம் கொடுத்து வந்தாலும் சொந்த வீடு கட்டும் யோகம் நிச்சயம் அமையும்.
- ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்க கொடுத்தால் வீடு வாங்கும் கனவு உண்மையாகும்.