லண்டன் – மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தண்டனை க்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
25 வயதான அகம்போதி டி சொய்சா என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர் மன்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தனது காதலியை பாலியல் ரீதியாக மிக மோசமாக சித்திரவதை செய்து இரத்தம் வரும் வரை தாக்கியுள்ளார்.
குறித்த பெண் மயக்கமுறும் வரை தாக்கிய பின்னர் தனது கையடக்கத்தொலைபேசியில் ஒளிப்பதிவும் செய்த நிலையில் நித்திரை செய்துள்ளார்.
பின்னர் ஹோட்டல் அறையிலிருந்து தப்பித்த அவரது காதலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் தனது காதலியை 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் சித்திரவதை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள், சேதம் விளைவித்தமை உட்பட முந்தைய குற்றங்களுக்கும் சேர்த்து இவருக்கு 12 வருட சிறைத்தண்டனையும் ஒத்தி வைக்கப்பட்ட மேலதிக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.