யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியிலுள்ள தேவாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதை உட்கொண்ட மக்களுக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.