சமூக ஊடகங்களைத் தடை செய்வதில் பயனில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றில் வழக்குக்காக வந்திருந்த நாமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இணையத் தளங்கள், சமூக ஊடக வலையமைப்புக்களைத் தடை செய்வதன் மூலம் இனப் பிரச்சினைக்கு எந்த வகையிலும் தீர்வு காண முடியாது.பொய்ப் பரப்புரைகளைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு சமூக ஊடக வலையமைப்புக்கள் தடை செய்யப்பட்ட போதிலும் அதில் பெரிய பயன் கிடையாதுதடைகளை மீறி இணையத்தைப் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் உண்டு. 2015ஆம் ஆண்டில் இந்தியாவும் இது போன்றதொரு முயற்சியை எடுத்த போதிலும் அதில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – – என்றார்.