இந்தியாவில் பள்ளிச் சிறுவனுக்கு காவல் ஆணையர் சல்யூட் அடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அந்நகர காவல் ஆணையர் சுனீல் குமார் மருத்துவமனை வளாகம் ஒன்றில் இருந்து வெளியே நடந்து வந்தார். அப்போது அவருக்கு முன்பு வந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், அவரைப் பார்த்ததும் சல்யூட் அடித்தான்.
அதற்கு காவல் ஆணையரும் பதில் சல்யூட் அடித்தார். இது அங்கிருந்த கமெராவில் பதிவாகியது. இந்த வீடியோவை பெங்களூரு நகர பொலிசார் வலைதளத்தில் பதிவு செய்ததுடன், ஒரு வாசகத்தையும் அதில் சேர்த்துள்ளனர்.
அதில், ‘ஒரு சீருடை இன்னொரூ சீருடைக்கு மதிப்பு அளிப்பது, ஒழுக்கத்தின் மதிப்பை காட்டுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.