பொதுவாக அனைவருக்குமே காரசாரமான உணவுகளை பிடிக்கும். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது. பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்.
மிளகாயினை காயவைத்து வற்றல் ஆன பின் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். பச்சை மிளகாயினை சாப்பிடுவதே முழு பயனையும் தரும்.
சத்துக்கள்
- ஆன்டி ஆக்ஸைடுகள்
- நார்ச்சத்து
- விட்டமின் சி, கே, ஈ
- இரும்பு சத்து
பயன்கள்
- பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கிறது.
- விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. பச்சை மிளகாய் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.
- விட்டமின் ஈ உள்ளதால் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கிறது. எனவே காரமான உணவை உண்பதால் நல்ல சருமத்தை பெறலாம்.
- பச்சை மிளகாயில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையினை குறைக்க உதவும் டயட்டில் இதனை சேர்த்து கொள்ளலாம்.
- ஆண்கள் பச்சை மிளகாயினை அதிக உணவில் சேர்த்து கொண்டால் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாவது குறையும்.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்வதற்கு பச்சை மிளகாய் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் உணவில் மிளகாய் சேர்த்து கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கலாம். மேலும், இதில் அதிகளவு நார்ச்சத்தானது உள்ளதால் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
- நுரையீரல் புற்றுநோய் உண்டாவதை குறைப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.
- இயற்கையாகவே பச்சை மிளகாயில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
- அதிகமாக அடிப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் உணவில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளும் போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதை தடுக்கிறது.