நடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்படமொன்றில் 102 வயது முதியவராக நடிக்கிறார்.
அமிதாப்பச்சனுக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ‘பா’ படத்தில் குள்ள மனிதராக வந்தார். தற்போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்படத்தில் 102 வயது முதியவராக அமிதாப்பச்சன் நடிக்கிறார். அவரின் 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்கிறார். அமிதாப் பச்சனும் 66 வயதான ரிஷி கபூரும் 27 வருடங்களுக்கு பின்னர் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாசப் போராட்டத்தை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் இந்தப் படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவின் தேசிய விருது வென்ற மேக்அப் மற்றும் சிகையலங்கார கலைஞரான பிரீத்திஷீல் சிங் அமிதாப் பச்சனை வயது முதியவராக மாற்றியள்ளனர். ரிஷி கபூருக்கும் அவர் மேக்அப் செய்துள்ளார்.
இது குறித்து ப்ரீத்திஷீல் சிங் கூறுகையில், “நான் குழந்தையாக இருந்தபோதே அமிதாப்பும் ரிஷி கபூரும் திரை யில் மின்னும் நட்சத்திரங்களாக விளங்கியவர்கள். அவர்கள் இன்னும் இதயங்களை ஆள்கின்றனர்.
அவர்கள் தமது மிகுந்த திறமைகள், நட்சத்திர அந்தஸ்து ஆகியவற்றுக்கு மத்தியிலும் மேக் அப் செய்து கொள் வதற்காக மிக நீண்ட நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.