இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி நகரத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட வன்முறை மோதல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் போது அதிக அவதானமாக இருக்குமாறு ஐக்கிய அரபு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த நாட்டு மக்களுக்கு சுற்றுலா ஆலோசனை அறிக்கை வெளியிட்டு இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அதிகமாக மக்கள் கூடும் இடத்தினை தவிர்க்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உதவி தேவைப்பாட்டால் தூதரகத்திற்கு விரைவாக தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் தங்கள் மக்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.