புத்தளத்தில் தீ வைக்கப்பட்ட முஸ்லிம் ஹோட்டல்! அதிரடி நடவடிக்கையில் சிங்கள மக்கள்….

புத்தளத்தில் இனவாதிகள் சிலரினால் நேற்று அதிகாலை தீ வைத்து அழிக்கப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று சில மணித்தியாலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியை சேர்ந்த பெருமைபான்மை இனத்தை சேர்ந்த மக்களின் இந்த அதிரடி மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீ வைத்து எரிக்கப்பட்ட ஹோட்டலை சில மணித்தியாலத்திற்குள் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆனமடுவ வர்த்தக சங்கம் மற்றும் பிரதேசவாதிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.15 மணியளவில் சைக்கிளில் வந்த குழுவினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டு ஹோட்டல் முழுமையாக அழிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அரசியல்வாதிகள், நகர வர்த்தக சங்கம் மற்றும் மதத்தலைவர்கள் இணைந்து நேற்று ஒரே நாளில் அந்த ஹோட்டலை முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 250க்கும் அதிகமானோர் அந்த ஹோட்டலை மீள்திருத்தம் செய்வதற்கு இணைந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஆனமடுவ பிரதேச சபைக்குக்கு தெரிவாகிய அரசியல் கட்சியாளர்கள், பொலிஸார் மற்றும் மதத்தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்துள்ளனர்.

அதற்கமைய இரவு 7 மணிக்கும் முன்னர் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ நகரத்தில் உள்ள ஒரே முஸ்லிம் ஹோட்டல் இதுவாகும். நாம் அனைவரும் சமாதானமாக வாழ்ந்தவர்கள், என ஹோட்டலை மீளவும் நிர்மாணிக்க உதவிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஹோட்டலுக்கு தீ வைக்க வந்தவர்களின் காட்சி சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளதென உறுதி செய்ய முடியாதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீயினால் ஏற்பட்ட நட்டத்தை உறுதியாக மதிப்பிடவில்லை என ஹோட்டல் உரிமையாளர் கூறிய போதிலும், கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என அந்த இடத்தில் இருந்தவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தில் கூடிய அனைவரும் இணைந்து ஹோட்டலை மீள நிர்மாணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ வைத்த சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.