பெரும்பாலோருக்கு குளிக்கும் போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்புகள் ஏற்படும்.
ஷவரில் குளிக்கும் போது நீர் நேரடியாகத் தலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் கூட மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் நாம் குளிக்கும் முறை மிகவும் தவறானது, முதலில் தலையில் தண்ணீர் ஊற்றவே கூடாது, காலில் இருந்து தான் நீரை ஊற்றத் தொடங்க வேண்டும்.
தற்போதைய பழக்கத்தில் இம்முறையை பின்பற்றாததால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றது.
இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை?
தலையில் இருந்து தண்ணீர் ஊற்றிக் குளித்தால் மாரடைப்பு வரும் என்பது நூறு சதவீதம் உண்மை என்று கூறிவிட முடியாது, ஆனால் அப்படி குளிக்கும் முறை மிகவும் தவறானது.
அதிகமான ரத்த ஓட்டம் உள்ள இடம் தலை. அதனால் தலையில் முதலில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து விட்டு, குறைவான ரத்த ஓட்டம் உள்ள பாதத்தில் இருந்து குளிக்க ஆரம்பிக்க வேண்டும்.
அதேபோல் மலம் கழிக்கும் போது காலை மடக்கி உட்கார்ந்திருக்கும் முறையாலும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையலாம், அதனால் மயக்கம் வரலாம்.
சில நேரங்களில், மலம் கழிக்க அதிகமாக ஸ்ட்ரெயின் செய்யும்போது ரத்தக்குழாய் வெடித்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிலருக்கு பாத்திங் எபிலெப்ஸி (Bathing epilepsy) பாதிப்புகள் சிறு வயதில் இருந்தே இருக்கும். அவர்களுக்கு மட்டும் தலையில் நீர் ஊற்றும் போது சின்னதாக அதிர்வு ஏற்பட்டு, சிறு மயக்கம் உண்டாகலாம். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.