பிரபல பாதாள உலக தலைவரின் சகாக்கள் கைது!

வெலிகமை பொலிஸ் பிரிவின் மிதிகம என்ற பிரதேசத்தில் ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன் பாதள உலகக்குழுவை சேர்ந்த இரண்டு பேரை திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவின் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, அதற்கான 10 தோட்டக்கள், கைக்குண்டு, 14.5 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 3 போலி அடையாள அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

31 மற்றும் 28 வயதான இந்த சந்தேக நபர்கள் மிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மதுஸ் என்ற பிரபல பாதாள உலக தலைவரின் சகாக்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தறை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபர் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கண்டி – ஹந்தானை பிரதேசத்தில் கைதுத்துப்பாக்கியுடன் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேல் மாகாண குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

33, 32 மற்றும் 28 வயதான இந்த நபர்கள், நிட்டம்புவ, கம்பஹா பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள், கொலை முயற்சி உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்ப்பட உள்ளனர்.