இந்த 4 நட்சத்திரக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்!

ஜோதிட ரீதியாக 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளது. அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அதிபதியும் உள்ளது.

அதன்படி, நட்சத்திரங்களின் வரிசையில் 19-வது இடத்தை பெறும் மூலம், 25-வது இடத்தை பெறும் பூரட்டாதி, 5-வது இடத்தை பெறும் மிருகசீரிஷம் மற்றும் 7-வது இடத்தை பெறும் புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் மார்ச் 21 திகதி வரை கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மூலம், பூரட்டாதி, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கிரகநிலை சஞ்சாரம் மார்ச் 21 வரை சரியில்லாத காரணத்தினால் இந்த 4 நட்சத்திரக் காரர்களும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகின்றது.

இந்த ராசிக்காரர்கள் முக்கியமாக எண்ணம், புத்தி, செயல், பேச்சு, முடிவெடுக்கும் தருணம் ஆகியவற்றில் கோபம், அவசரம், குழப்பங்கள் ஏற்படலாம்.

வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. தினமும் வீட்டை விட்டு செல்லும் முன் குலதெய்வம் மற்றும் முன்னோர்களை வணங்கி விட்டு சென்றால் நன்மை கிடைக்கும்.