இது தான் உண்மைக் காதல்…….நாள் குறித்து ஒன்றாக உயிரை விட்ட தம்பதி!!

அமெரிக்காவில் 66 ஆண்டுகள் சிறந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மூத்த தம்பதி சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.போர்ட்லாண்ட் நகரை சேர்ந்தவர் சார்லி (87), இவர் மனைவி பிரான்ஸி (88).இவர்களுக்கு 66 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் காதலுக்கு வயதில்லை என்பதை கூறும் வகையில் மிகவும் அன்பாக வாழ்ந்து வந்தனர்.வயது முதிர்வு காரணமாக பிரான்ஸிக்கு இதய நோயும், சார்லிக்கு புற்றுநோயும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிருக்கு உயிராக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் ஒன்றாக இணைய விரும்பினார்கள்.அந்நாட்டில் உள்ள கண்ணிய சட்டத்தின் கீழ் சரியான காரணத்துடன் இறக்க விரும்புகிறவர்கள், மருத்துவர்களால் கருணை கொலை செய்யப்படுவார்கள்.அதற்கு சார்லியும், பிரான்ஸியும் நாள் குறித்து ஒன்றாக இறக்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்கள்.அதன்படி கடந்தாண்டு ஏப்ரல் 20-ஆம் திகதி படுக்கையில் படுத்திருந்த தம்பதி இறப்பதற்காக மருந்து செலுத்தப்பட்டது.

முதலில் பிரான்ஸி இறந்தநிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் சார்லி உயிரிழந்தார்.இது குறித்து தம்பதியின் மகள் ஷெர் சாப்ரான் கூறுகையில், இருவரும் இறந்து ஒரு வருடம் ஆக போகிறது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பு வியக்கத்தக்கது.சட்டத்தில் இது போல இறக்க வழி இருந்ததால் தான் அவர்கள் அப்படி செய்தார்கள் எனக் கூறியுள்ளார்.