தொழில்நுட்பம் ஊடாகவும், ஊடகங்கள் மூலமும் உலகத்திலும், இலங்கையிலும் பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும், இதற்காக எதிர்காலத்தில் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் அண்மையில் நடந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு நபரோ அல்லது சிலரோ இனவாத இலக்கின் ஊடக செயற்பட்டால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற வகையில் எடுக்க வேண்டும்.
இலங்கையில் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்காக சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தேர்தலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது கூட யார் அச்சிட்டு வெளியிட்டது என கூறவேண்டியது அவசியம்.
இணையத்தளம் எதனை வெளியிட்டாலும், வெளியிட்டவர் பெயரை குறிப்பிட்டோ, தொலைபேசி இலக்கத்தை வழங்கியோ, முகவரி மூலமோ தனது பொறுப்பை ஏற்கவேண்டும்.
அவ்வறில்லாமல் ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.