வன்முறையாளர்களின் அட்டகாசம்! காணொளி அம்பலம்!

கடந்த வாரத்தில் இனவாத தாக்குதலினால் அமைதியிழந்த கண்டி நகரம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் நேரடி கண்காணிப்பில் கண்டி நிர்வாக நகரம் இன்று வழமைக்கு திருப்பியது.

பல நாட்களாக பகுதியளவில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக பாடசாலைகள் உள்பட வேலைத்தளங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் இன்று சகல துறைகளும் வழமை போன்று செயற்பட ஆரம்பித்துள்ளன.

எனினும் இனவாத தாக்குதல் நடத்தப்பட்ட கால எல்லைக்குள் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வர்த்தக நிலையங்களுக்கு அப்பால் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்த கொள்யைடித்த குப்பல் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இனவாத வன்முறையாளர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடத்தி வரும் நிலையில் இவ்வாறான காணொளிகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் இதுவரை 230 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.