ஒடிசாவில் திருமணம் முடிந்த ஆறு நாட்களில், தனது மனைவியை காதலனுடன் கணவர் சேர்த்து வைத்துள்ளார்.
ஒடிசாவின் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள பாமரா கிராமத்தைச் சேர்ந்தவர், பாசுதேவ் டாப்போ. இவருக்கும் ஜார்சுடுடா மாவட்டத்தைச் சேர்ந்த தேப்தி என்கிற பெண்ணுக்கும் கடந்த 4-ம் திகதி திருமணம் நடந்தது.
தேப்திக்கு பெற்றோர் இல்லாததால், மனைவி மீது பாசுதேவ் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்நிலையில் திருமணமான ஆறு நாளில் தேப்தியின் உறவினர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தினர் வந்தனர்.
அதில் இருவர் பாசுதேவை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டனர், அந்த சமயத்தில் தேப்தியுடன் நபர் ஒருவர் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த பாசுதேவின் உறவினர்கள் அந்நபரை அடித்து உதைக்க உண்மை வெளிப்பட்டது, அவர் தேப்தியின் முன்னாள் காதலர் என தெரியவந்தது.
இதை அறிந்து கொண்ட பாசுதேவ், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார்.