பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். அந்நாட்டில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பேசி உள்ள அவர், 2014 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அந்த விமானத்தைக் கொண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடரை தாக்குவதற்காக கடத்தல்காரர்கள் திட்டுமிட்டு இருப்பதாகவும் தகவல் வந்தது.
இத்தாக்குதலை தடுக்க அவ்விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். ஆனால், அத்தகவல் பொய்யான ஒன்று தெரிந்தது. அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றுள்ளார்.
சிறிய ரக தனியார் விமானம் ஒன்று இரான் வான் எல்லையில் விபத்துக்கு உள்ளானதில், பிரபல துருக்கிய தொழிலதிபரின் மகள் உட்பட 11 பேர் மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என துர்கிஷ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்கு உள்ளான அந்த விமானத்தில் 11 பேர் இருந்ததாகவும், அதில் மூன்று பேர் விமான ஊழியர்கள் என்றும், 8 பேர் பயணிகள் என்றும் துருக்கிய அதிகாரிகள் கூறினர்.
மேற்கு இரான் வான் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஹூசைன் பஸாரனின் மகள் மினா பஸாரனுக்கு அடுத்த வாரம் திருமணம்.
இதற்காக தன் தோழிகளுக்கு துபாயில் விருந்து வைத்தார். இவ்விருந்து முடித்து அனைவரும் திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள கிழக்கு நதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடந்ததாக கூறியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரில் ஆறு பேர் வரை பயணிக்கலாம். விபத்துகுள்ளான போது, அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிரியவுக்கு அமெரிக்கா கண்டனம்
விஷ வாயுவை பயன்படுத்துவது மிகவும் விவேகமற்ற செயலாக இருக்கும் என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மாட்டிஸ் சிரியாவை கண்டித்து உள்ளார்.
கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சிப்படைக்கும், சிரியா அரசுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் அந்தப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
செயற்பாட்டாளர்களும், மீட்பு பணியாளர்களும், சிரியா அரசு கிழக்கு கூட்டாவில் க்ளோரின் வாயுவை பயன்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், சிரியா அரசாங்கம் இதனை மறுத்து வருகிறது. இப்படியான சூழலில் ஜிம் இவ்வாறாக கூறி உள்ளார்.
3 பெண்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்- தானும் தற்கொலை
பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 3 பெண்களையும் அந்த நபர் சுட்டுக் கொன்றான். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டன்.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நபா பள்ளத்தாக்கில் யுவான்ட் வில்லேவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் உள்ளது. அங்கு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் பல முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அங்கு ஒரு மர்ம நபர் வந்தார். அவர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து அங்கு இருந்தவர்களை மிரட்டினார்.
அவர்களில் அங்கு பணியில் இருந்த 3 பெண்களை பிடித்துக் கொண்டார். மற்றவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்.
இதற்கிடையே தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 3 பெண்களையும் அந்த நபர் சுட்டுக் கொன்றான்.
அவர்களது பெயர் ஜெனிபர் கோலிக் (42), கிறிஸ்டின் லோபர் (48), ஜெனிபர் கான்சிலேஷ் (29). இதற்கிடையே அவர்களை கொன்ற மர்மநபர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது பிணங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்து கொண்ட கொலையாளியின் பெயர் ஆல்பர்ட் வாங் (36) என தெரியவந்தது. இவர் முன்னாள் கடற்படை வீரர். சேக்ராமண்யே பகுதியை சேர்ந்தவர்.
இவர் ஆப்கானிஸ்தானில் கடந்த 2010 முதல் 2013-ம் ஆண்டு வரை தங்கி பணி புரிந்துள்ளார். தனது சிறப்பான சேவைக்காக 4 பதக்கங்கள் பெற்றுள்ளார். மன அழுத்தத்துக்காக இங்கு சிகிச்சை பெற்றுள்ளார். இவர் எதற்காக 3 பெண்களை சுட்டுக் கொன்றார் என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.