போனிகபூர் உடனான வாழ்க்கை நிம்மதியை தரவில்லை! – ஸ்ரீதேவி மாமா

ஸ்ரீதேவியின் மரணம் அவரது குடும்பத்தையும், அவரது கோடானகோடி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பலரால் ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.

54 வயதில் உறவினர் திருமண விழாவுக்கு துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டல் அறை குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.

ஸ்ரீதேவி போனி கபூருடனான இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருக்கவில்லை என்று அவரது மாமா தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு சராசரி மருமகள் எத்தகைய சிரமங்களை புகுந்த வீட்டில் கடந்து வருவாளோ, பெரும் நடிகையாக இருந்த போதிலும் கூட, அத்தகைய சிரமங்கள் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி.

துயரம் மிகுந்த

போனி கபூருடன் இரண்டாம் திருமணம் செய்துக் கொன்ட ஸ்ரீதேவியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. மிகவும் துயரம் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. போனியின் தயார் ஸ்ரீதேவியை விரும்பவில்லை. மேலும், போனி-ஸ்ரீ திருமணத்தையும் அவர் மகிழ்ச்சியாக ஏற்கவில்லை என்று ஸ்ரீதேவியின் மாமா வேணுகோபால் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மிடில்-கிளாஸ்

சிவகாசியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதேவி. தனது நடிப்பின் திறமையால் இந்தியா முழுவதும் பல மொழி படங்களில் முதன்மை நாயகியாக வளம் வந்துக் கொண்டிருந்தார். இந்தி சினிமாவில் பெரும் நட்சத்திரமாக உருவான பிறகு தான் இவர் போனி கபூர் எனும் இந்தி பட தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டார்.

பண சிக்கல்

ஸ்ரீதேவியை திருமணம் செய்துக் கொண்ட போது போனி கபூரின் பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. அவர் தயாரித்த சில படங்கள் லாபகரமாக அமையவில்லை. அதன் காரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஸ்ரீதேவி உழைத்து வாங்கிய சொத்துக்களை விற்று ஈடு செய்தனர்.

வலி

தான் சிரமப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் போனி கபூரின் பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீதேவி அந்த காலத்தில் பலத்த மனச்சுமைக்கு ஆளானார். அந்த தருணத்தில் போனி நாள் பொழுதில் வெளிவரவே இல்லை, மிக கடுமையான நெருக்கடியில் தவித்து வந்தார்.

வங்கிக்கடன்கள்

நஷ்டம் காரணமாக வங்கி கடன் நிலுவையில் இருந்தன. அதையும் சீர் செய்ய தனது பல சொத்துக்களை விற்றார் ஸ்ரீதேவி. அதன் பிறகே மீண்டும் தான் நடிக்க முன்வந்தார் என்று இவரது மாமா வேணுகோபால் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட அந்த கட்டத்தில் ஸ்ரீதேவி கத்தியின் மேல் நடப்பது போன்ற சூழலில் வாழ்ந்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி

ஸ்ரீதேவி அமெரிக்கா சென்று மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள காரணமாக அமைந்ததும் அதுதான். அவர் தான் அந்த சமயத்தில் அழகாக இருக்க வேண்டும் என்று கருதினார். இது, பொதுவாக ஒருமுறை போன் கால் செய்து பேசிய போது அறிய வந்த செய்தி சென்று வேணுகோபால் கூறியிருக்கிறார்.

தவறான சிகிச்சை

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு அமெரிக்க மருத்துவர்கள் தவறாக மூளை அறுவை சிகிச்சை செய்தனர். இதன் காரணமாக அவரது வாழ்க்கை முடங்கி போனது. அவர் உணர்வுகள் இழந்து வெறும் ஜடம் போல இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் பிறகு அந்த மருத்துவமனையின் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறப்பட்டது.

பங்கீடு

இந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீலதா இருவர் மத்தியில் பண பங்கீட்டில் வேறுபாடு நிலவியது என்றும், பெரும் தொகையை தனது சகோதரி ஸ்ரீலதாவிற்கு விட்டுக் கொடுத்தார் ஸ்ரீதேவி என்றும் வேணுகோபால் பேட்டியில் கூறியிருந்தார்.

அர்ஜுன் கபூர்

ஸ்ரீதேவி தனது உறவினர்கள் சிலரிடம் அர்ஜுன் கபூர் (போனி கபூரின் முதல் மனைவியின் மகன்) மூலம் சில இடைஞ்சல்கள் இருப்பது போலவும், அவர் தன் மீது கோபமாக இருக்கிறார் என்பது போலவும் கூறியிருந்தார் என்று கூறிய வேணுகோபால் அதுகுறித்து எந்தளவு உண்மை என்று தாம் அறியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

எதிர்காலம்

தனது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இருவரின் எதிர்காலம் குறித்து ஸ்ரீதேவி பெரும் வருத்தத்தில் இருந்தார். மேலும், போனியின் உடல்நலம் சரியில்லை என்பதும் அவரது மனதில் ரணமாக இருந்த வந்தது. இப்படியான சூழலில் தான் ஸ்ரீதேவியின் திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

வேணுகோபால் அந்த தெலுங்கு சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறிய சம்பவங்கள், நிகழ்வுகள் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால், திருமணத்திற்கு பிறகும், தனது கடைசி நாட்களிலும் ஸ்ரீதேவி மிகுந்த மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் என்பதை மட்டும் அறிய முடிகிறது.