சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா?

முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம்.

அதற்கு பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தைப் பராமரித்தார்கள்.

அந்த அழகு குறிப்புகளை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி சருமத்தை பொலிவாக மாற்றலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவி வந்தாலே முகம் எப்போதும் பொலிவோடு பளிச்சென்று மின்னும்.

கடலை மாவு

கடலை மாவில் மோர் கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதை அடிக்கடி செய்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

புதினா

புதினா இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்த பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் விரைவில் வெள்ளை ஆகலாம்.

சந்தனம்

சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.

சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து கழுவி வர சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.