சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் c4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம்பெற்றபோது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும், சீ4 (c4) வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டு சென்றுள்ளனர்.