கண்டி தாக்குதலின் பின்னணி… திடுக்கிடும் புது தகவல்கள்!

கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதையும் ஸ்தம்பிதம் அடையச் செய்திருந்தது கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்.

கண்டி நகரத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையே கடந்த 4ஆம் திகதி முதல் ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக ஊரடங்குச் சட்டம் மற்றும் 6ஆம் திகதி அவசரகாலச் சட்டம் என்பன அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டன.

சிலரின் உயிரை காவு கொள்ளும் வன்முறையாக இது பார்க்கப்பட்டது மட்டுமன்றி, அரசிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்த பதவி ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கண்டியில் ஏற்பட்ட வன்முறை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆங்காங்கே வியாபித்தது, இந்நிலையில், குறித்த கண்டி கலவரம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதேவேளை, கண்டி தாக்குதலின் பின்னணி தொடர்பான தகவல்களை லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்ச்சியின் மூலம் தெளிவுபடுத்துகின்றார் மூத்த சட்டவாளரும், அரசியல் விமர்சகருமான எம்.நிலாம்டீன்,