பிரபல பாடகர் உதித் நாராயணன் மகன் கைது!

பிரபல திரைப்பட பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்யாவை பொலிசார் கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் 15000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளவர் உதித் நாராயணன்.

இவரது மகன் ஆதித்ய நாராயண், தனது மெர்சிடஸ் காரை ஓட்டிச் சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, உள்ளிருந்த பெண் பயணிக்கு கால் எலும்பும் முறிந்தது.

இதுகுறித்த புகாரில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, ஆதித்ய நாராயணை மும்பை பொலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆதித்ய நாராயண், 10,000 பணம் செலுத்தியதையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.