குப்பையில் போடும் உணவை காசு கொடுத்து வாங்கும் மக்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் ஏழை மக்கள் ‘பக்பக்’ என்ற உணவுகளை சாப்பிடுகின்றனர்.

அதாவது குப்பையில் வீசப்படும் உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவை ‘பக்பக்’ என்று அழைக்கிறார்கள்.

இந்த உணவுகள் மிகக் குறைந்த விலையில் ஏழைகளால் தயாரிக்கப்பட்டு, ஏழைகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளில் போடப்பட்டுள்ள சமைக்கப்படாத இறைச்சி, சமைத்து வீசப்பட்ட இறைச்சி போன்றவற்றைச் சேகரித்து, அவற்றைத் தனித்தனி பைகளில் போட்டு ஏழைகள் வசிப்பிடத்துக்கு எடுத்து வருகிறார்கள்.

அவைகளை ரூ.70 கொடுத்து ஒரு உணவகத்தில் வாங்கி, அதில் உள்ள குப்பைகள் மற்றும் எலும்புகளை நீக்கி, தண்ணீரில் அலசி, மசாலா, காய்கறிகள் சேர்த்து புது உணவாகச் சமைக்கிறார்கள்.

அதன் பின் சோறு மற்றும் இறைச்சி குழம்புமாக ரூ, 35-க்கு விற்பனை செய்கிறார்கள்.

இந்த உணவகத்திற்க்கு ஏழைகள் மட்டுமே சாப்பிட வருகிறார்கள், வேலை செய்து பணம் கிடைத்து விட்டால், அன்று உணவகத்திற்கு வர மாட்டார்கள்.

அவர்களே நல்ல உணவைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பசிக் கொடுமையைச் சமாளிக்க முடியாததால் அந்த உணவகத்திற்கு வந்து சாப்பிடுகின்றனர்.

இவ்வாறு வேண்டாம் என்று தூக்கி போடப்பட்ட இறைச்சியில் உணவு சாப்பிடக்கூடிய சுவையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட உணவு விஷத்திற்கு ஒப்பானது என்பதால் தொடர்ச்சியாக இந்த உணவைச் சாப்பிடுபவர்கள் விரைவிலேயே மரணத்தைச் சந்தித்து விடுகிறார்கள் என்று கூறுகின்றனர்.