சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற மகள்.. திரும்பாமலே போயிவிட்டார்!

தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற இளம்பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் அவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்பதும் தெரியவந்துள்ளது.

சுபா உயிரிழந்தது குறித்த் தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.

சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜ் பேச முடியாமல் தவித்தார். பின்னர் எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார்.

தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.