தமிழ்நாட்டில் முறைதவறிய உறவை கண்டித்த கணவனை மனைவி அடியாட்களை வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மனைவி சந்திரமதி. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
செல்வம் திங்கட்கிழமை காலை அங்குள்ள வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து செல்வத்தின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து பொலிசார் ஆய்வு நடத்தினர்.
இதில் கொலை நிகழ்ந்த இடத்திலிருந்து செல்வத்தின் மனைவியான சந்திரமதியின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சந்திரமதியிடம் பொலிசார் விசாரித்த போது, செல்வத்தை ஆட்களை வைத்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் வீட்டருகில் உள்ள ஒரு இளைஞருக்கும் தொடர்பு இருந்தது. இது செல்வத்துக்கு தெரியவர, எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து அடியாட்களை வைத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து ஸ்ரீதர் என்பவரை நாடினேன்.
ஸ்ரீதர் தலைமையிலான ஆட்கள் இருட்டான வயல்வெளிக்கு செல்வத்தை அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் என கூறியுள்ளனர்.
இது சம்மந்தமாக சந்திரமதி மற்றும் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட நால்வரை பொலிசார் தேடி வருகிறார்கள்.