தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை வாலிபர் தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அந்த பெண்ணிடம் அந்த இளைஞன் எதோ பேசிவிட்டு திடீரென கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்.
பெண் தாக்கப்படுவதை பார்த்த அந்த வழியாக சென்ற மற்றொரு பெண், அந்த பெண்ணை வாலிபரிடமிருந்து மீட்டு அழைத்து செல்கின்றார்.
உபி மாநிலம் பிலிபிஹிட் பகுதியில் இந்த சம்வம் நடைபெற்றுள்ளது. எனக்கென்ன என்று போகாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண்ணின் செயல் பாராட்டிற்குரியது.