தமிழீழ வைப்பகத்தின் சிறுவர் சேமிப்பு புத்தகங்கள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவந்த தமிழீழ வைப்பகம் சிறுவர் சேமிப்பு கணக்கின் புத்தகங்கள் இன்று வலைஞர்மடப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அரச கட்டமைப்பு வளர்ச்சியுடன் பல திணைக்களங்களை நிறுவி செயற்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தமிழீழ வைப்பகம் ஒரு நிர்வாக கட்டமைப்பாக செயற்பட்டிருந்தது. .

மேலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இலங்கை அரசாங்கத்தின் சேமிப்பு வங்கிகளின் செயற்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழீழ வைப்பகத்திலும் தமது கணக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் ‘அமுதம்’ என்னும் சிறுவர் கணக்கினை தமிழீழ வைப்பக நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் தமிழ் பெயர்களை கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் விடுதலைப் புலிகள் நிதி அன்பளிப்பு செய்து முதற்கட்ட கணக்குகளை ஆரம்பித்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழீழ வைப்பகம் சிறுவர் சேமிப்பு கையேட்டு புத்தகங்கள் சில இன்று வலைஞர்மடப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.