ஒன்றரை வயது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் தன் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணியில் கணபதி -சுமித்ரா என்ற தம்பதியர் வசித்து வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியருக்கு இடையே நாளடைவில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காலை எழுந்தவுடன் வழக்கம்போல் கணபதி பணிக்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சுமித்ரா தன் மகனை தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதிய உணவிற்க்காக வீடு திரும்பிய கணபதி, இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.