பௌத்த மஹாநாயக்கர்களுடன் மூடிய அறையில் பேச்சுவார்த்தை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை அஷ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த மஹாபீடங்களின் மஹாநாயக்கர்களை மூடிய அறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை.

சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதை பிரதமர் அலுவலகம் மற்றும் அஷ்கிரிய மஹாபீடம் ஆகியவற்றின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதன்போது கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேநேரம் கண்டியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.