இலங்கையில் வன்முறை! ஜப்பானில் செல்பி மோகத்தில் மைத்திரி!

உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் சென்றுள்ளார்.

ஜப்பான் சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் இணைந்து கொண்டுள்ளார்.

அதற்கயை ஜப்பானில் உள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜப்பான் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து ஜப்பானில் வாழும் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

டோக்கியோ நகரில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது அங்கு வந்த இலங்கையர்கள், ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களான இலங்கையில் நிலவிய இன வன்முறை காரணமாக நாடு அமைதி இழந்துள்ளது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் தலைவர் இங்கிருந்து பிரச்சினைகளை சரி செய்வதில் அக்கறை காட்டுவதை விடுத்து, ஜப்பானில் செல்பி எடுத்து மகிழ்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.